சென்னை: விவசாய உற்பத்தியைத் தகவல் தொழில்நுட்ப உதவியோடு மேம்படுத்தும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சுக்கும் சென்னை ஐஐடி கல்வி நிலையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ‘விஸ்டார்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘விஸ்டார்’ திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளது.
“இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் அண்மையில் கையெழுத்தானது,” என்றும் சென்னை ஐஐடி மேலும் குறிப்பிட்டுள்ளது.

