சென்னையில் அனைத்துலகக் கல்வி மாநாடு

சென்னையில் அனைத்துலகக் கல்வி மாநாடு

1 mins read
9dad2363-6f83-46b2-acd2-89eb9d50939d
தமிழச்சி தங்கபாண்டியன். - படம்: இந்தியா டுடே

சென்னை: தமிழக அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாநாட்டை, புதன்கிழமை (ஜனவரி 28) திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்வில் பேசிய அவர், கல்விதான் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இணைப்பு சக்தி என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசின் டிஸ்கோ நிறுவனம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், தொழில்துறையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், நடப்பு திமுக ஆட்சியில் கல்வி மேம்பாட்டுக்காகப் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மக்கள் தொகையில் 6 விழுக்காட்டைக் கொண்டுள்ள தமிழகம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 9 விழுக்காடு பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் கனியன் பூங்குன்றனார். உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் உறவினராகக் கருதுவது தமிழ்ச் சமூகம்தான்,” என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

குறிப்புச் சொற்கள்