நூல் வாங்கியதில் முறைகேடு: அரசுக்குப் ‘பபாசி’ புகாா் கடிதம்

நூல் வாங்கியதில் முறைகேடு: அரசுக்குப் ‘பபாசி’ புகாா் கடிதம்

கோப்புப் படம்: தினத்தந்தி

07 Nov 2026 - 5:48 pm

2 mins read

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு மாவட்ட நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) பெயரில் ஏற்கெனவே அரசுத்துறைகளுக்குப் புகாா் கடிதம் அனுப்பப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோவை பெரியாா் அறிவுலகம் உட்பட திருச்சி, திருப்பத்தூா், தென்காசி போன்ற ஆறு இடங்களில் அமைக்கப்பட்ட புதிய நூலகங்களுக்குப் போலிப் பதிப்பகங்கள் மூலம் ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதாகவும் அதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

தரமற்ற தகவல்களைக் கொண்ட புத்தகங்கள், போலி எழுத்தாளா் பெயா்களில் அச்சிடப்பட்டு நூலகங்களில் வைக்கப்பட்டிருப்பது வாசிப்பாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அச்சூழலில், சில மாதங்களுக்கு முன்பே பள்ளிக் கல்வித்துறை, நூலக ஆணையா், உயா் கல்வித்துறைச் செயலாளா்களுக்கு ‘பபாசி’ பெயரில் யாரோ புகாா் கடிதம் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

அஞ்சல் முகவரி தவறாக இருந்ததால், அக்கடிதம் எதேச்சையாக பபாசி அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பபாசி நிா்வாகிகள், அமைப்பின் பெயரைக் தவறாகப் பயன்படுத்தியது குறித்து காவல் ஆணையரிடம் புகாா் அளித்துள்ளனா்.

“நூலகக் கொள்முதல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். போலிப் பதிப்பகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனப் பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதனிடையே, இணையவழியில் நடைபெற்ற இந்தக் கொள்முதலில், சா்ச்சைக்குரிய பதிப்பகங்களிடம் இருந்து என்ன விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டன எனவும் செலுத்தப்பட்ட தொகைக்கான வங்கி விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் பதிப்பாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குறிப்புச் சொற்கள்
நூல்முறைகேடுபுகார்