ராமநாதபுரம்: இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி அசைவ உணவு சாப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
மலை மீது ஏறும்போது நவாஸ்கனி எம்பி அங்கிருந்த காவல்துறையினரை மிரட்டும் தொனியில் பேசியதாகவும் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் செயல்படுவதாகவும் பாஜக சாடியுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,” என்று பாஜக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.