செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் கவலையில்லை: எடப்பாடி

செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் கவலையில்லை: எடப்பாடி

2 mins read
93c55524-80a2-4592-9015-bc33dce0a771
தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப்படங்கள்: ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை பனையூரில் நவம்பர் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார்.

திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்​நிலை​யில், அண்மையில் அதி​முக​வில் சேர்ந்த ராம​நாத​புரம் சமஸ்​தான இளைய மன்​னர் நாகேந்​திர சேதுபதி வீட்டுத் திருமண விழா மதுரை​யில் நடந்​தது. இந்தத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி கே.பழனி​சாமி வியாழக்கிழமை மதுரை வந்​தார்.

மதுரை மாவட்ட முன்​னாள் அமைச்​சர்​கள் செல்​லூர் கே.​ராஜூ, ஆர்​பி.உதயகு​மார், அமைப்பு செய​லா​ளர் விவி.​ராஜன் செல்​லப்பா ஆகியோர் தலை​மை​யில் கட்​சி​யினர் மாபெரும் வரவேற்பு அளித்​தனர்.

திருமண விழாவிற்கு வந்திருந்த பழனி​சாமி​யிடம் செய்​தி​யாளர்​கள், செங்​கோட்​டையன் தவெக​வில் இணைந்​தது பற்றி கேள்வி எழுப்​பினர். அதற்கு அவர், “என்​னிடம் ஏன் கேட்​கிறீர்​கள். அதை அவரிடமே கேளுங்​கள். அவர் எந்​தக் கட்​சி​யில் சேர்ந்​தால் எங்களுக்கு என்ன? அவர் அதி​முக​வில் இல்​லை. எனவே, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை,” என்று கூறி​னார்.

இருப்பினும், செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்தனர். அப்போது “நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன், தான் எனத் தண்டிப்பார்,” என்று செங்கோட்டையன் உங்களை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அது அவருடைய கருத்து, அதற்கெல்லாம் என்னிடம் பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அவர் அதிமுகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி கருத்துச் சொல்வதற்கு எதுவுமில்லை,” என்று கூறிச் சென்று விட்டார்.

தவெகவின் வெற்றிக்காக பாடுபடுவேன்: செங்கோட்டையன்

இந்நிலையில், சென்னையில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “மக்களின் ஆதரவுடன் 2026 ஆம் ஆண்டில் ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வார். புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ விஜய்க்கு உதவுவேன். அதிமுகவில் இருந்து மேலும் சிலர் வருவது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. சொன்னால் பிரச்சினை வரும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன்,” என்று கூறியுள்ளார்.

நான் தவெகவில் சேர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் ஒன்றாகவே பயணிக்கின்றன. அதனால்தான் நான் தவெகவில் இணைந்தேன்.

தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதற்காக நான் தவெகவில் இணைந்துள்ளேன். தவெகவிற்கு வெற்றியைத் தர மக்கள் காத்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்