ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஜப்பானில் இன்று (பிப்ரவரி 21) வெளியாகிறது. ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ‘பாகுபலி-2’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களும் ஜப்பானில் வெளியாகி வசூலில் அசத்தின.
அண்மையில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படத்துக்கு ஜப்பான் மட்டுமின்றி சீனாவிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ஏற்கெனவே பெரும் வசூல் கண்டுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஜப்பானில் மேலும் பல கோடிகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

