தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி அகழாய்வு விவகாரத்தை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்: தமிழக பாஜக

1 mins read
dfd89d8b-8b63-4954-ba48-54d1d23a3b37
எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநர்கள் மேலும், அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கீழடி விவகாரத்தில், தமிழகத்தை ஆளும் திமுக அரசு பிரிவினைவாத அரசியல் செய்வதாக தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

தங்களது ஊழல், முறைகேடுகளையும் குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காகவே இந்தியாவைத் துண்டாடும் உள்நோக்கத்துடன் திமுக செயல்படுவதாக, அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநர்கள் மேலும், அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்.

“அகழாய்வு போன்ற வரலாற்றை தீர்மானிக்கும் முக்கியமான ஆய்வுகளில், எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு விளக்கம் அளிக்க, ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தயாராகவே இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் அதற்கு நேர் எதிராக நடக்கிறது,” என்று பிரசாத் அறிக்கையில் கூறியுள்ளார்.

“எத்தனை தரவுகள் கேட்டாலும் அதை கொடுக்க தொல்லியல் ஆய்வாளர்கள் தயாராகவே இருப்பார்கள். அதை ஏன் முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை கேட்ட அத்தனைக்கும் தரவுகள் கொடுத்து விட்டோம். மத்திய தொல்லியல் துறையிடம் இனி கேள்விகள் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினால் அதை ஏற்கலாம். எனவே, கீழடி விவகாரத்தை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்,” என்று பிரசாத் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்