கீழடி ஆய்வறிக்கை: ஸ்டாலின் உறுதி

கீழடி ஆய்வறிக்கை: ஸ்டாலின் உறுதி

1 mins read
3140211f-6bc2-43e5-ae24-625241d69914
அனுமதிக்காக பல மாதங்கள் காத்திருந்ததாகவும் அந்த விடாமுயற்சிக்கான வெற்றியாக அனுமதி கிடைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: “கீழடி ஆய்வறிக்கையை நிச்சயம் வெளியிட வைப்போம்,” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக தமது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் அழுத்தத்தாலும் பல கடிதங்களை அனுப்பியதாலும் மட்டுமே எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதிக்காக பல மாதங்கள் காத்திருந்ததாகவும் அந்த விடாமுயற்சிக்கான வெற்றியாக அனுமதி கிடைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. அதையும் கண்டிப்பாக வெளியிட வைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்