அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் லாரன்ஸ் கருத்துக் கேட்பு

அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் லாரன்ஸ் கருத்துக் கேட்பு

1 mins read
a8beb1fb-3880-44a5-8cc1-13dfec784310
ராகவா லாரன்ஸ். - படம்: தினமலர்

சென்னை: “அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி உள்ளதா?” என மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகப் பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) லாரன்ஸ் கூறியிருந்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 12) சமூக ஊடகங்களில் லாரன்ஸ் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

கிட்டத்தட்ட 18 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில், “ இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்குள் வர வேண்டும். எனது சமூக சேவை குறித்து மக்கள் அறிவீர்கள்.

“முன்னர் அரசியல் வேண்டாம் என்று சொன்ன எனது தாயார் இப்போது அரசியலுக்கு அனுமதி வழங்கியுள்ளார். நான் அரசியலுக்கு வரலாமா? என என்னுடைய ரசிகர்களிடமும், மக்களிடமும் கேட்க விரும்புகிறேன்,” என்று கூறிய லாரன்ஸ், காணொளிக்குக் கீழ் மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்