வால்பாறை: சிறுமியைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதை அடுத்து வால்பாறை பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த 20ஆம் தேதி அங்குள்ள பச்சைமலை பகுதியில் நுழைந்த சிறுத்தை, 7 வயதுச் சிறுமியைத் தாக்கி இழுத்துச் சென்றது.
நீண்ட தேடுதலுக்குப் பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்த நிலையில் ஜூன் 26ஆம் தேதி சிறுத்தை சிக்கியது.
சிறுத்தை பிடிபட்டதை அடுத்து அப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம் நீங்கி நிம்மதி ஏற்பட்டுள்ளது.

