சமத்துவம் மலர பெரியார் வழியில் நடப்போம்: விஜய்

1 mins read
4d191bc0-2670-4dc3-8f0f-097b8d84cc0d
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். - படம்: ஊடகம்

சென்னை: தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர், எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

“அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணம் செய்ய அனைவரும் உறுதியேற்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்