மாநில சுயாட்சிக்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய மு.க.ஸ்டாலின் அறைகூவல்

மாநில சுயாட்சிக்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய மு.க.ஸ்டாலின் அறைகூவல்

1 mins read
301a1ff5-f3c9-4440-a7a5-2bc098026ee0
திமுக பவள விழாவில் அக்கட்சிப் பிரமுகர் பலருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முதன்முறையாக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு திமுக துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். - படம்: ஊடகம்

சென்னை: அனைத்து அதிகாரங்களும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கான சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாக மேற்கொள்ளும் என்று திமுக பவள விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

“குறைவான நிதிவளத்தைக் கொண்டே, இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழகத்தை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும்.

“எனவே, அனைத்து அதிகாரங்களும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்ற வேண்டும்,” என்றார் மு.க.ஸ்டாலின்.

இன்று ‘க்ரீம் பன்’னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகி உள்ளதாகவும் இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்காகவே இந்த அறிவிப்பை தாம் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“திமுக கடந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். அதேநேரத்தில், நமது எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால் இல்லை.

“மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் போராட வேண்டியுள்ளது.

“ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழகத்தை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்