தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுகவில் இணைந்த மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிர்வாகி

1 mins read
b30ed294-48f5-46c2-9596-f5cd8158591c
அதிமுகவில் சேர்ந்தார் ஓம். பிரகா‌ஷ். - படம்: தந்தி / இணையம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம். பிரகாஷ், திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) அதிமுக கட்சியில் சேர்ந்தார் என்று தந்தி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி அறிக்கை மூலம் அதிமுக இத்தகவலை வெளியிட்டது.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, எம்.ஜி.ஆர். மாளிகையில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளரான ஓம். பிரகாஷ் நேரில் சந்தித்தார் என்று அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சந்திப்பின்போது அவர் அதிமுகவில் இணைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இதர சிலரும் சந்திப்பில் காணப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்