விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த மலேசியப் பிரதமர்

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த மலேசியப் பிரதமர்

1 mins read
3d54ce2a-6ed9-4d4b-957c-f624f3ed3bd8
மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று, கலாசாரப் பிணைப்புகளைப் பகிர்ந்து வருவதாகத் திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
Google News Preferred Icon

சென்னை: எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட செய்தியில், மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று, கலாசாரப் பிணைப்புகளைப் பகிர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் மோடி, இலங்கை அதிபர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வரிசையில், மலேசியப் பிரதமரும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“நண்பர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தைவிட மிக உயர்ந்த பொறுப்பைத் தமிழ்நாட்டு மக்கள் விஜய்யிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மலேசிய முன்னாள் அமைச்சர் சரவணன் சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

அது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்தவெகமுதல்வர்விஜய்