திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: வைகோ அறிவிப்பு

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: வைகோ அறிவிப்பு

2 mins read
1d20ad57-045d-4609-8840-70dfc827b969
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

கூட்டணியில் இருந்து விலகும் முடிவையடுத்து, அண்மைய தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவ்விருவரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்து விட்டநிலையில், கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும் மதிமுகவிலேயே நீடிப்பதாக தம்மிடம் உறுதி அளித்திருப்பதாக வைகோ தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் தமக்கும் மதிமுகவுக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட வைகோ, தவெக தலைவர் விஜய்யுடன் தான் நடத்திய சந்திப்பு 80 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், தவெக ஆட்சியில் ஊழல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் சமூக நீதி, இரு மொழி கொள்கைகளில் தவெக தலைமை உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.

எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், தொகுதி மக்​கள் நாள்​தோறும் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​து பதவி விலகப் போவதில்லை என்றும் இது தொடர்பாக வைகோ பிறப்பித்த உத்தரவை தம்மால் செயல்படுத்த இயலாது என்றும் கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“மதி​முக அலு​வல​க​மான தாயகத்​தில் ஜூன் 26ஆம் தேதி வைகோவை சந்​தித்துப் பேசினேன். பதவி வில​கல் என்ற முடிவை மேற்​கொள்ள வேண்​டாம் என்று தெரி​வித்​தேன்.

“சட்​டப்​பேர​வை​யில் எனது செயல்​பாடு​கள் தகுதி நீக்​கத்​துக்கு வழி​வகுத்​தால் மகிழ்ச்​சி​யுடன் பதவியைத் துறந்து மக்​களிடம் முறை​யிடு​வோம் என்​றும், இப்​போது அவசரம் வேண்​டாம் என்​றும் குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம் என்​றும் கூறினேன். கூட்​டணி குறித்து எடுக்​கும் முடிவை மதிப்​ப​தாக​வும் இன்​னும் சில பல செய்​தி​களை​யும் வைகோ​விடம் கூறி கண்ணீருடன் முறை​யிட்​டேன்,” என்றும் தமது சமூக ஊடகப் பதிவில் ராஜேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்