தவெக உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது

1 mins read
e31a4d0f-9cc6-4665-972a-744ff6ff9d5d
விஜய்யின் தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இரண்டு கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: டெக்கான் கிரோனிக்கல்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதாவது, அக்கட்சி 34.92 விழுக்காடு வாக்குகளை அள்ளி திமுக, அதிமுக பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து, கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்றார்.

இந்நிலையில், தவெகவின் உறுப்பினர் சேர்க்கை தற்போது இரண்டு கோடியைக் கடந்துள்ளது.

தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாகத் தவெக தற்போது உருவெடுத்து இருக்கிறது.

இதனைச் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு தவெகவினர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
விஜய்தவெகதேர்தல்