திருப்பூர்: தமிழகத்தில் பால் விற்பனை 6 லட்சம் லிட்டராக அதிகரித்து உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் நலன் கருதி பால் விலையைக் குறைத்தது திமுக அரசுதான் என்றார்.
“ஆவின் நிறுவனம் இருப்பதால் தனியார் நிறுவனங்களால் பால் விலையைக் கட்டுப்பாடின்றி உயர்த்தமுடியாது. தமிழகத்தில் செயல்படாமல் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இயக்கப்படும்,” என்றார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.

