சென்னை: ஆதிக்கத்தை எதிர்ப்பதும் தாய்மொழியைக் காப்பதும் திமுக தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதிக்க மொழியிடமிருந்து தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரான அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்,” என்று திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.