பேரவைத் தேர்​தலில் மநீம போட்​டி​ இல்லை: கமல்​ஹாசன் அறி​விப்பு

பேரவைத் தேர்​தலில் மநீம போட்​டி​ இல்லை: கமல்​ஹாசன் அறி​விப்பு

1 mins read
4010ff7f-2405-42f0-949c-6eae20e177b5
திமுக கூட்​ட​ணிக்கு நிபந்​தனை இன்றி ஆதரவு அளிப்​போம் என்று கமல்ஹாசன் கூறி​யுள்​ளார். - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்​டும் என்ற பரிந்துரை ஏற்​புடையதாக இல்​லாத​தால் தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, கமல்ஹாசன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கக் கோரியதாகவும் திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் மட்டுமே தர இயலும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்​நிலை​யில், செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி அளவில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலினைச் சந்​தித்​துப் பேசி​னார் கமல். அப்​போது தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் திமுக​வுக்கு ஆதரவு அளிப்​பது என்ற கட்​சி​யின் முடிவை ஸ்டா​லினிடம் அவர் தெரி​வித்​தார்.

இதையடுத்து, மநீமவுக்கு ஒதுக்கப்பட இருக்கும் தொகு​தி​களின் எண்​ணிக்​கை​யும் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்டும் என்ற பரிந்​துரை​யும் மநீம கட்சி உறுப்​பினர்​களுக்​கும் தமக்​கும் ஏற்​புடைய​தாக இல்​லை என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“டார்ச் லைட் சின்​னத்​துட​னான மநீம கட்சித் தொண்​டர்​களின் பிணைப்பு உணர்​வுபூர்​வ​மானது. இந்தச் சின்​னம் வெறும் சின்​னம் அல்ல. அது எங்​களின் அடை​யாளம். ஆகவே, இந்தத் தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிட​வில்​லை. திமுக கூட்​ட​ணிக்கு நிபந்​தனை இன்றி ஆதரவு அளிப்​போம்,” என்று கமல்ஹாசன் கூறி​யுள்​ளார்.

இதனிடையே, கமல் செய்திருப்பது உண்மையிலேயே பெரிய தியாகம் என்றும் அவரது முடிவு தம்மை நெகிழ வைத்​து​விட்​டது என்றும் முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்