சென்னை: மழை வெள்ளத்தின்போது விமானச்சேவைகள் முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விமான ஓடுபாதை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளததாகச் சென்னை விமான நிலைய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மற்ற விமான நிலையங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை நேரத்தில் விமானச் சேவையில் மாற்றங்கள் ஏற்பட்டால் பயணிகளுக்கு உரிய தகவல்கள் அனுப்ப ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். குறிப்பாக விமான நிறுவனங்கள் தங்களுடைய இணையத்தளத்தில் இதுகுறித்து உடனுக்குடன் அறிவிப்புகளை இடம்பெறச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலமாக தகவல்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


