கோவை: முருகனின் ஏழாவது படை வீடான கோயம்புத்தூரிலுள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மருதமலை கோவில் அடிவாரத்தில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க உள்ளோம். இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட சிலையாக அமையும். இது தொடர்பாக விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யவுள்ளது.
“முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில் ஏறக்குறைய 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது,” என்றார்.