கரூர்: தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்துயரச் சம்பவத்தைச் செரிக்க இயலாமல் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது இதயம் நொறுங்கிப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
“கரூரில் உயிரிழந்த எனதருமைச் சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
“மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்,” என்றும் விஜய் மேலும் கூறியுள்ளார்.