திருநெல்வேலியில் போட்டியிடாதது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலியில் போட்டியிடாதது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்

1 mins read
பாஜக வேட்பாளர்கள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல்
70b5c982-94b4-4cc0-b360-069d36951428
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (நடுவில்) அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தார். அவர்களுடன் திருவாட்டி தமிழிசை சௌந்தரராஜன். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை பாஜக ஏன் விட்டுக்கொடுத்தது என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

“அதிமுக திருநெல்வேலியில் போட்டியிட விரும்பியதால் அந்தத் தொகுதிக்குப் பதில் நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் அறிவித்தவுடன் சாத்தூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வேன். எந்தத் தொகுதிக்குச் சென்றாலும், தமிழகம் முழுவதும் மக்கள் பணி தொடரும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“திருநெல்வேலிக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளைதான். திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டனர். தொகுதி எண்ணிக்கை முக்கியமல்ல, மக்கள் எண்ணம் தான் முக்கியம்,” என்று அவர் தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்கள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரம் இல்லை. திமுக சமயம் சார்ந்து நடக்கிறது,” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்