சென்னை: சிங்கப்பூர் போல் ஓரடுக்கு ‘ஜிஎஸ்டி’ முறையைப் பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதை நோக்கிப் பயணிப்பதுதான் அடுத்த இலக்காக இருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜிஎஸ்டி முறையில் வரி தொடர்பாகத் திருத்தப்பட வேண்டிய பல குறைகள் உள்ளன. இட்லி, தோசை, ஆகியற்றுக்குக்கூட 5 விழுக்காடு வரிவிதிக்கப்படுவது சரியல்ல. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கான ‘ஜிஎஸ்டி’ வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்,” என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

