தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழனியில் அன்னதானம் வழங்க புதிய கட்டுப்பாடு

1 mins read
2b5e081e-335f-42ed-a978-9385b2ed5aa2
பழனி முருகன் கோவில். - படம்: தமிழக ஊடகம்

பழநி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்குப் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

பழனி முருகன் கோவில் ஈராயிரம் ஆண்டு பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாப்படுகிறது. அத்திருநாளின்போது பழனி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சமயத்தில், பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி உட்பட பலவகைக் காவடிகளைச் சுமந்து, முருகப்பெருமானுக்குத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

இந்நிலையில், அவ்வாறு வரும் பக்தர்களுக்குத் தனது அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு, முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்