நம்பிக்கை தரும் புத்தாண்டு மலர்கிறது: ஸ்டாலின்

1 mins read
e7c2cb1f-1056-4ab2-9ada-ec24fafeca46
முதல்வர் ஸ்டாலின். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்

சென்னை: “ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் தமிழக மக்களுக்கு வெற்றி ஒளி வீசும், நம்பிக்கை தரும் புத்தாண்டாக 2026 மலர்கிறது ,” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், அனைத்து மக்களுக்கும் தமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“புத்தாண்டுத் தொடக்கம் முதல் சமத்துவம் பொங்கட்டும், தமிழகம் வெல்லட்டும் எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்.

“திமுகவினர் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை இலக்கிய நிகழ்வுகள் என மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்த ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்,” என முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்