கும்பகோணம்: தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்தவித மறைமுகப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊடகங்களில் இதுகுறித்து வெளியான தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்றார்.
கரூர் விவகாரத்தில் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெளிவுபடுத்திய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் 34 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கஞ்சா போதையில் உள்ளவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டுகிறார்கள் என்றார்.
கடந்த சில நாள்களாகக் சிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையும் என்று தமிழக ஊடகங்களில் பல்வேறு ஆருடச் செய்திகள் வலம்வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தவெக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் இத்தகவலை மறுத்துள்ளார்.

