அதிமுக பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை

1 mins read
90ca6d7f-e90e-420a-9457-badd8426e315
அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அதிமுக அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பெயர்ப் பட்டியலில் பெயர் இல்லாதது விவாதங்களைக் கிளப்பியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாவட்டப் பொறுப்பாளர் இல்லாமல் செங்கோட்டையனுக்கு வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்