சென்னை: சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மறுதேர்வு நடத்த இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், வரும் 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டு, 75 நிமிடங்களுக்கு அது நீடித்தது.
இதனால் தங்களால் சரியாகத் தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மீண்டும் தேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
மின்தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும் கவனச்சிதறல் ஏற்பட்டது என்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.