சென்னை: அதிமுக தலைமையிலான தேர்தல் கூட்டணி மிரட்டல் மூலம் அமையவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணி மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது என்றும் அனைவரும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பாஜக தலைமை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவை மிரட்டிப் பணிய வைத்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். எங்களுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை,
“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
“அதிமுக, பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல, நாங்கள் வெற்றிக் கூட்டணி, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்துள்ளோம். இந்தக் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன,” என்றார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து யாரும் சந்தேகம் எழுப்பத் தேவையில்லை என்றார்.