‘ஒன்றிணைந்து பாஜகவை விரட்டியடிப்போம்’

இந்தி பேசாத மாநிலங்களே முன்னேறுகின்றன: ராஜ் தாக்கரே

2 mins read
041681f6-d67b-4933-aeea-1b64bc028f9c
பாஜகவிடம் இருந்து மராத்திய மொழியைக் காக்க ஒன்று சேர்ந்த பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே. - கோப்புப்படம்: ஊடகம்

மும்பை: இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் முன்னோக்கி செல்கின்றன. ஆனாலும் அவர்கள் நாம் இந்தி கற்க வேண்டும் என விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார் ராஜ் தாக்கரே.

நான் இந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால், வட்டார மொழியை அழித்து இந்தியை ஏன் திணிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராஜ் தாக்கரே.

சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேயின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். இரு தரப்பினரிடையே 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையின்படி, மராட்டியத்தில் 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் முடிவை திரும்பப் பெற்றது. இது தொடர்பான வெற்றிப் பேரணி. மும்பை ஆசாத் திடலில் நடைபெற்றது.

இதில்தான், ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து பால்தாக்கரேயும் ராஜ்தாக்கரேயும் மொழிக்காக ஒன்று சேர்ந்தனர்.

முன்னதாக, மராத்திய மொழியை கட்டாயமாக்கும் முடிவுக்கு எதிராக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இருவரும் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரசு தன் முடிவை ரத்து செய்துவிட்டதால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பேரணிக்குப் பதிலாக, வெற்றிக் கூட்டத்தை அவர்கள் நடத்தினர்.

சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அணி), மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.

“சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அணி), மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.

“எங்களுக்கு இடையேயான தடையை தானிய விவசாயிகள் நீக்கியுள்ளனர். இப்போது நாங்கள் ஒன்றாக வாழ்வதற்காக ஒன்றிணைந்துள்ளோம். இப்போது நாங்கள் ஒன்றாக இணைந்து பாஜகவை விரட்டியடிப்போம்,” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்