டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: 14,000 காவல்துறையினர் குவிப்பு

டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: 14,000 காவல்துறையினர் குவிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

01 Nov 2026 - 5:16 pm

2 mins read

புதுடெல்லி: புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா கூட்டணி’ சார்பில் போராட்டம் நடைபெற்ற போராட்டம் காரணமாக தலைநகரில் போக்குவரத்து நிலைகுத்தியது.

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி, சோனியா, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் ராம்லீலா திடலை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். போராட்ட அறிவிப்பையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

சட்டம் ஒழுங்கைப் பேணவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏறக்குறைய 10,000 காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர்.

டெல்லியில் முக்கியச் சாலைகள் அனைத்தும் பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. போராட்டம் நடைபெறவிருக்கும் இடங்கள், பதற்றமான பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க 250 நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபரைச் சந்திக்கத் திட்டம்:

தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தங்களது புகார்களை இந்திய அதிபர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிட இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், இந்தப் போராட்டங்களை டெல்லியோடு நிறுத்தாமல் நாடு முழுவதும் மாநில வாரியாக விரிவுபடுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையர் மீது விரைவில் பெரிய உண்மைகளை வெளிப்படுத்தப் போவதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆளுங்கட்சியான பாஜக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, பாஜகவின் வட மும்பை மாவட்டப் பிரிவு, தனது ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 31, சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்த நடைப்பயணத்தில் 12,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், மும்பை வடக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்