45 தொகுதிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குப்பதிவு: கரூரில் உச்சம்

45 தொகுதிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குப்பதிவு: கரூரில் உச்சம்

2 mins read
84bf8551-8b07-493f-b64d-8808e29c0730
தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாகக் கரூர் தொகுதியில் 93.41 விழுக்காட்டு வாக்குகளும் வீர​பாண்​டி​யில் 93.36 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தேர்தல் நடைபெற்ற 234 தொகுதிகளில் 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் 45 தொகுதிகளில் அந்த விகிதம் 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

தமிழகச் சட்​டமன்றத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் இம்மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது.

அரசி​யல் கட்​சிகளின் வேட்​பாளர்​கள், சுயேச்​சைகள் என மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்டனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

45 தொகு​தி​களில் 90 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவாயின.

தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாகக் கரூர் தொகுதியில் 93.41 விழுக்காட்டு வாக்குகளும் வீர​பாண்​டி​யில் 93.36 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கரூரில் மொத்​தம் உள்ள 2.29 லட்​சம் வாக்​கு​களில் 2.14 லட்​ச​மும் வீர​பாண்​டி​யில் மொத்​தம் உள்ள 2.50 லட்​சம் வாக்​கு​களில் 2.33 லட்​ச​மும் பதி​வாகி​ன.

மாவட்ட அளவில் அதி​கபட்​ச​மாகக் கரூரில் 92.65 விழுக்காட்டு வாக்குகளும் குறைந்​த​பட்​ச​மாகக் கன்​னி​யாகுமரி​யில் 75.55 விழுக்காட்டு வாக்​கு​களும் பதி​வாகி​ன.

இவை தவிர, 151 தொகு​தி​களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் 37 தொகு​தி​களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் வாக்​கு​கள் பதிவாகின.

70 விழுக்காட்டுக்குக் கீழ் (68.90%) வாக்​கு​கள் பதி​வான ஒரே தொகுதி பாளை​யங்​கோட்டை.

சென்னை மாவட்​டத்​தில் 83.71 விழுக்காட்டு வாக்​கு​கள் பதி​வாகின.

அதி​கபட்​ச​மாக ஆர்.கே.நகரில் 90.56 விழுக்காட்டு வாக்​கு​களும் குறைந்தபட்சமாக மயி​லாப்​பூரில் 74.84 விழுக்காட்டு வாக்​கு​களும் பதிவாகின.

முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூரில் 86.12 விழுக்காட்டு வாக்குகளும் விஜய் போட்​டி​யிட்ட பெரம்​பூரில் 89.74 விழுக்காட்டு வாக்​கு​களும் பதி​வாகின.

குறிப்புச் சொற்கள்