திமுகவின் நீதிமன்ற எதிர்ப்பை மீறித் தொடங்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்

2 mins read
f2d15fb6-ae10-4e03-8a33-b2e0972d4555
பீகாரில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மாயமாவதுபோல் தமிழகத்தில் ஏற்படலாம் என்ற கவலையை தமிழக அரசியல் கட்சிகள் சில உணர்கின்றன. - படம்L இணையம்

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) முதல் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தொடங்குகிறது. 

இறந்தவர்களின் பெயரை நீக்குதல், முகவரி மாறியோரின் விவரங்களைப் புதுப்பித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெறும் வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்டவற்றைத் திருத் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இருந்தபோதும் இந்நடவடிக்கையை திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன. 

பீகாரில் இதுபோல நடைபெற்ற நடவடிக்கையின்போது ஏறத்தாழ 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள்  இவ்வாண்டு செப்டம்பர் 30க்குள் நீக்கப்பட்டன. இந்தப் பெரும் எண்ணிக்கையால் மேலும் பலர் தங்கள் வாக்குரிமையை இழக்கக்கூடும் என்ற அச்சங்கள் நிலவுகின்றன. 

சிறப்புத் தீவிரமாகத் திருத்தம் செய்ய எடுத்த முடிவை எதிர்த்து, தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) , திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

வரையறையற்ற இந்த நடைமுறை, வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் திமுக எச்சரித்தது.

தமிழகக் கட்சிகள் இடையே மாறுபட்ட நிலைப்பாடு

பராதிய ஜனதாக் கட்சி, அகில இந்திய அண்ணா திராவிடர் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆதரித்ததால் இதன் தொடர்பில் திமுக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய எதிர்ப்புக் கூட்டணியில் அக்கட்சியினர் பங்கேற்கவில்லை

நடவடிக்கையை எதிர்த்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகியவை அந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை திருத்தத்தை எதிர்த்தபோதும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவின் நோக்கத்தை முன்னதாகக் கேள்வி எழுப்பியபோதும் இறுதியில் அவரது கட்சியினர் எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்