தாயகம் திரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள்: தேர்தல் ஆணையம் வியப்பு

தாயகம் திரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள்: தேர்தல் ஆணையம் வியப்பு

1 mins read
94c184b8-7cbb-41fe-8a04-8ba0ed183d3d
கேரளாவில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான தமிழக ஊழியர்களுக்கு அங்குள்ள தனியார் நிறுவனங்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளித்துள்ளது. - கோப்புப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பலர் பணி விடுப்பு எடுத்துக்கொண்டு, விமானம் மூலம் நாடு திரும்புவதாக வெளிவரும் செய்திகள் தேர்தல் ஆணையத்துக்கு வியப்பை அளித்துள்ளன.

வேலைக்​காக பல்வேறு நாடு​களுக்குச் சென்​றுள்ள தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் குழு​வாக​வும் தனித்​தனி​யாக​வும் விமானம் மூலம் தமிழகம் திரும்​பிக் கொண்​டிருப்பதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

நாள்தோறும் பல்வேறு விமானச் சேவைகள் மூலம் வெளி​நாடு​களில் இருந்து சென்​னைக்கு ஏறக்குறைய 8,500 பயணி​கள் வரு​வது வழக்​கம். இந்நிலையில், கடந்த சில நாள்​களாக இவ்வாறு சென்னைவரும் பயணி​களின் எண்​ணிக்கை கணிசமாக அதி​கரித்​துள்​ளது.

இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வத்துடன் விடுப்பு எடுத்துக்கொண்டு தாயகம் திரும்புவது தெரியவந்துள்ளது.

இம்முறை தமிழகத்தில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், வெளி​நாடுவாழ் தமிழர்களின் வருகை தேர்​தல் ஆணைய அதி​காரி​களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான தமிழக ஊழியர்களுக்கு அங்குள்ள தனியார் நிறுவனங்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்