தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

2 mins read
d203ed30-17a8-46f1-84da-130f1c481abb
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். இன்று அவரது பொறுப்புகளை பறித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - படம்: தமிழக ஊடகம்

திண்டுக்கல்: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கியுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் 10 கெடு விதித்திருந்தார். கட்சியை வலுப்படுத்த முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் விமர்சகர்களை மீண்டும் சேர்த்த உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் கருத்துக்களுக்குப் பிறகு, செங்கோட்டையன் வகித்து வந்த மாநில அமைப்புச் செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

திண்டுக்கல்லில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று காலை (செப்டம்பர் 6) அவசர ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அதிமுக நிர்வாகப் பொறுப்பிலிருந்து கூண்டோடு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தைக் கூறினேன். கட்சிப் பொறுப்புகளிலிருந்து என்னை நீக்கியதற்கு வருத்தம் இல்லை. எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

“ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், விளக்கம் கேட்காமலேயே பதவியைப் பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும்,” என்று அவர் கூறியுள்ளார்.

செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களின் நீக்கம், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலின் தீவிரத்தைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் கட்சியின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் வீட்டுக்கு . தொடர்ச்சியாக ஆதரவாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்