88 வயதில் கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

88 வயதில் கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

1 mins read
3311db81-6e16-4fe8-a285-634c91a26b26
பண்ருட்டி ராமச்சந்திரன். - படம்: தினமணி

சென்னை: பழம்பெரும் அரசியல் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தனது 88வது வயதில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதுக்கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ள அவர், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரு ரஞ்சித் குமார் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்படுவார் என்றும் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட திரு பண்ருட்டி ராமச்சந்திரன், தாம் ஓ.பன்னீர்செல்வத்துடன் பழகிய காரணத்துக்காக வாழ்நாளை வீணாக்க முடியாது என்றார்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, பாமக சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியைக் கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார்.

குறிப்புச் சொற்கள்