புறக்கணித்த கட்சி நிர்வாகிகள்; தனியாக பிரசாரம் செய்த தவெக வேட்பாளர்

புறக்கணித்த கட்சி நிர்வாகிகள்; தனியாக பிரசாரம் செய்த தவெக வேட்பாளர்

1 mins read
4effb587-5c43-4f49-b004-dd28c7e529d5
தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். - படம்: இந்து தமிழ் திசை

திருவள்ளூர்: திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், கட்சி நிர்வாகிகளின் ஆதரவின்றி தன்னந்தனியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும்கூட குறைந்தபட்சம் பத்து பேர் சூழ, தொகுதியை வலம் வரும் நிலையில், சத்யகுமார் மட்டும் தனியாக பிரசாரம் செய்கிறார்.

வேட்பாளராக சத்யகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதும் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் அப்போது அனைவரையும் தகாத வார்த்​தைகளால் விமர்சித்ததாகவும் கூறப்​படு​கிறது.

இதனால் ஆவேசமடைந்த தவெகவினர் மாற்றி வேறு வேட்​பாளரை அறிவிக்க கட்சி தலைமையை வலியுறுத்தி, தேர்​தல் பணி​களை புறக்​கணித்துள்ளனர்.

அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான சத்​யகு​மார், வேட்பு மனு தாக்​கல் செய்ய எதிர்ப்பு தெரி​வித்​து திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் அருகே தவெகவினர் ஆர்ப்​பாட்​டத்​திலும் ஈடு​பட்​டனர்.

இதனால் இரு நாள்களுக்கு முன்பு துணைக்கு யாருமின்றி தனியாகவே திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்தில் அவர் தனது வேட்​புமனுவைத் தாக்​கல் செய்​தார்.

மேலும், தன்​னந்​தனி​யாக பிர​சா​ரத்​திலும் ஈடு​பட்​டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்