தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை: அன்புமணி குற்றச்சாட்டு

2 mins read
81eec0df-9cf1-44ed-9a93-bc9630934cd1
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரே நாளில் எட்டு பேர் தமிழகம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு மது, போதைப் பொருள்களே முக்கியக் காரணங்கள் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக்கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் பலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

“இதனால் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும்கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை திமுக அரசுக்கு இல்லை எனச் சாடியுள்ளார்.

“தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போன்று படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. ஆனால், கொலைகளை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி மறைப்பதிலும், பிரச்சினைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது,” என்று அன்புமணி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக்கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் அண்மையில அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக சட்டப்பேரவையிலும் முதல்வர் ஸ்டாலின் இத்தகவலை வெளியிட்டார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் அறிக்கை வழி அரசைச் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்