தஞ்சாவூரில் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி

தஞ்சாவூரில் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி

1 mins read
4d5ca526-d1ad-4e9a-a8c4-384451e1bb01
கூட்டத்தில் பங்கேற்க தவெகவின் 4,900 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - படம்: தினமணி

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் கூட்டத்தை தஞ்சாவூரில் மார்ச் 4ஆம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளை விஜய் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். அந்தச் சந்திப்புக் கூட்டத்தை மார்ச் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலைப் பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான இடத்தை தவெகவினர் தேர்ந்தெடுத்து, காவல்துறையினரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 4,900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் தவெகவினர் கூறியுள்ளனர்.

அடையாள அட்டையிலுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னர் அவர்கள் திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்