மருத்துவர் கத்திக் குத்து சம்பவம்: தாக்கியவரின் தாயார் மீது புகார்

மருத்துவர் கத்திக் குத்து சம்பவம்: தாக்கியவரின் தாயார் மீது புகார்

1 mins read
74fd0117-99c9-4e9e-b98a-783c5460624f
(இடமிருந்து) விக்னேஷ், மருத்துவர் பாலாஜி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது கத்தியால் குத்திய சம்பவத்தில் எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் அவதூறு பரப்புவதாக தனியார் மருத்துவர் மோசஸ், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இதன் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தனது தாய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்காததால் கத்தியால் தாக்கியதாக கைதான விக்னேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுரையீரல் பிரச்னைக்கு மூன்று முறை தன்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்தார்,” என்று தனது புகார் மனுவில் ஜேக்கலின் மோசஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்