தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பாம்பன் ரயில் பாலம்: பிப்ரவரி 11ல் திறந்து வைக்கும் மோடி

1 mins read
11679ae2-da9d-490a-9172-8d6d43e46bdf
பாம்பன் புதிய ரயில் பாலம். - படம்: ஊடகம்

ராமேசுவரம்: புதிகாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 11ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

ரூ.545 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 11ஆம் தேதி அல்லது அதற்கு முந்திய நாளில் திறக்கப்படும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்துக்கு கப்பலில் வருகை தரும் பிரதமர் மோடி, பாம்பனில் உள்ள பழைய, புதிய ரயில் பாலங்கள் இரண்டையும் பார்வையிடுவார் என்றும் பின்னர் புதிய பாலத்தில் இயக்கப்படும் முதல் ரயிலில் அவர் பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திறப்பு விழா நடைபெறும் இடம் மண்டபம் பகுதியிலா அல்லது ராமேசுவரத்திலா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

முன்னதாக திறப்பு விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமையன்று புதிய பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரை, ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரயில் புதிய பாலத்தில் சென்றது. மேலும், செங்குத்து (பக்கவாட்டு) தூக்குப் பாலத்தை தூக்கிய பின்னர் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல் ஒன்று பாலத்தினூடே சென்று திரும்பியது.

22 மீட்டர் உயரமுள்ள கப்பல்கள் புதிய பாம்பன் தூக்குப் பாலத்தினூடே பயணம் மேற்கொள்ள முடியும்.

குறிப்புச் சொற்கள்