தமிழகம் முழுவதும் 53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் 53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

1 mins read
d2401dde-f4bf-45d4-a6bc-e8c1ec158921
சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் முதல்​வர் விஜய் சில குழந்தைகளுக்குத் தன் கையால் சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுக்கு அவர் பொம்மைகளைப் பரிசளித்தார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகம் முழுவதும் 53 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் முதல்​வர் விஜய் சில குழந்தைகளுக்குத் தன் கையால் சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுக்கு அவர் பொம்மைகளைப் பரிசளித்தார்.

இந்​தி​யா​வில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பு நடவடிக்கையாக ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்​பட்ட குழந்​தைகளுக்கு இரு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. அதனால், தற்​போது ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​வதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன.

காலை முதல் மாலை வரை இந்த முகாம்களுக்கு ஏராளமான பெண்கள், கைக்குழந்தைகளுடன் வருகை தந்தனர்.

இந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்​பட்ட ஏறக்குறைய 53 லட்​சம் குழந்​தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்