சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராகச் செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சி நிர்வாகிகளை அவர் இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் பிப்ரவரி 26ஆம் தேதியன்று நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.