கோவை இயற்கை வேளாண் மாநாட்டுக்கு பிரதமர் மோடி வருகை

1 mins read
e02eabb9-5909-464f-add5-6325d0f4a4f8
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை நாளை (19.11.2025) தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் வரும் புதன்கிழமை (19.11.2025) தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள்களுக்கு அங்குள்ள கொடிசியா அரங்கில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.

மேலும், இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் செய்து சிறப்​பாக செயல்​பட்ட 18 விவ​சா​யிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்​கு​கிறார். இந்த மாநாட்​டில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இயற்கை விவ​சா​யிகள் கலந்துகொள்ள உள்​ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் கோயம்புத்தூர் வரு​கை​யை முன்னிட்டு, விழா நடை​பெறும் பகு​தியிலும் பிரதமர் வந்து செல்​லும் வழித்​தடங்​களி்லும் மொத்​தம் மூவாயிரம் காவலர்கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட உள்​ள​தாக காவல்​ துறை உயர​தி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

பிரதமர் மோடி கோவைக்கு வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகை தரும் நாளான நவம்பர் 19ஆம் தேதி மாநகரம் முழுவதும் முக்கியப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்