அடையாற்றைச் சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி

1 mins read
258eacd6-34c5-47fc-903d-a9d9fad9ae55
அமைச்​சர் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு சென்​னை​யில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்​பு​களைத் தடுப்​ப​தற்​கும் பெரிய அளவி​லான பாதிப்​பு​களி​ல் இருந்து சென்​னையைக் காப்​ப​தற்​கும் ஏராள​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளதாக அமைச்​சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடை​யாற்றைச் சீரமைக்க ரூ.1,500 கோடி செல​வில் திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாகக் குறிப்பிட்டார்.

“சென்​னை​யின் குடிநீர் ஆதா​ர​மாக விளங்கும் பூண்​டி, சோழ​வரம், செங்​குன்​றம், செம்​பரம்​பாக்​கம், கண்​ணன்​கோட்டை தேர்​வாய் கண்​டிகை, வீராணம் ஆகியவை உள்ளன. மாநகரின் ​ஒட்​டுமொத்த நீர் ஆதா​ரத்​துக்கு 13,222 மில்​லியன் கன அடி நீரைத் தேக்கி வைத்​துக்கொள்​ள இந்த ஏரிகள் பயன்​படுகின்றன.

ஆறு, ஏரிகளிலும் தற்​போது 10,028 மில்​லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்​ளது,” என்றார் திரு மா.சுப்பிரமணியன்.

அடையாற்றில் முன்பு 25,000 கன அடி நீர் மட்​டுமே தாங்​கும் என்றும் அதற்கு மேல் நீர் வந்​தால் அடை​யாற்றோரம் உள்ள குடி​யிருப்புப் பகு​தி​களுக்​கு பாதிப்பு ஏற்​படும் என்றும் அவர் கூறினார்.

“அடை​யாற்றைச் சீர்​படுத்​து​வதற்​காக ரூ.1,500 கோடி செல​வில் மிகப்​பெரிய திட்​டம் செயல்​படுத்​தப்பட இருக்​கிறது.

“அடை​யாற்​றி​ல் இருந்து சைதாப்​பேட்டை வரை அடை​யாற்​றின் இரு வழிகளி​லும் கரைகள் எழுப்பி பலப்​படுத்தி சுற்​றுலா மைய​மாக மாற்​றப்பட உள்​ளது,” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்