ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு: விஜய் வாக்குறுதி

1 mins read
f893cfdb-97ec-4dba-9c73-96df16d6e949
புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் சூறாவளிப் பிரசாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: நியூஸ் 18

புதுச்சேரி: புதுச்சேரி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதி ஒன்றைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்வைத்தார்.

“புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான விரிவான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ஏழை, எளிய மக்கள் பெரிய அறுவை சிகிச்சைகளுக்காகவோ அல்லது தொடர் சிகிச்சைகளுக்காகவோ கடனாளியாக மாறும் நிலையை நாங்கள் மாற்றிக் காட்டுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

30 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தட்டாஞ்சாவடி பகுதியில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியபோது, “புதுச்சேரியில் தவெக முதல்முறையாக களம் காண்கிறது. இங்கு மக்களோடு மக்களாக நிற்கின்றவர்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளேன்.

“தவெக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற 100 விழுக்காடு முயற்சி எடுக்கப்படும். உடனடியாகத் தள்ளிப்போயுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

“அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும்.

“நல்லாட்சி அமைய தவெகவிற்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையவேண்டும்,” எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்