லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார் ரச்சிதா ராம்.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். ‘கூலி’யில் இவரது நடிப்பு விமர்சகர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் ரச்சிதா. அப்போது கன்னடத்தில் நாயகியாக நடித்து வரும் ‘லேண்ட் லார்ட்’ என்ற படத்தின் டீசர் வெளியானது.
அதில், ரச்சிதாவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் சூட்டப்பட்டது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது நடிப்பைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டியதாகக் கூறியுள்ளார் ரச்சிதா.
“அது மிகப் பெரிய உற்சாகத்தைத் கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்திலும் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. எனினும், ‘கூலி’க்குப் பிறகு எதிர்மறை கதாபாத்திரம்தான் அதிகம் வருகின்றன,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ள ரச்சிதாவுக்கு அவரது பெற்றோர் தகுந்த வரன் தேடி வருகிறார்களாம்.
அதனால் கூடிய சீக்கிரமே தனக்கு திருமணம் நடப்பது உறுதி என்கிறார்.
“அவரது திருமணத்துக்கு வாழ்த்துகள். அதற்காக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை அவராக எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்,” என்று நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.