சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டிருந்த ரஜினி வெள்ளிக்கிழமை காலை ( செப்டம்பர் 4) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
74 வயது ரஜினிகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நன்றாக இருப்பதாக தெரிவித்தது.
ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருந்ததால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்தது.
இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி அவர் வீடு திரும்பினார்.

