சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காவலர்களை அவமரியாதையுடன் பேசி, மிரட்டிய ஜோடிக்கு பிணை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு சுற்றுக் காவலில் ஈடுபட்ட காவலர்கள் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, காவலர்களை ஆபாசமாக திட்டிய காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது.
இதையடுத்து காணொளியில் சவால்விட்ட ஜோடி அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிணை கோரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த மாதம் 25ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது பிணை மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிணை மனு திங்கட்கிழமை (அக்டோபர் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது இருவருக்கும் பிணை வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் அவர்களுக்கு பிணை வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து பிணை மனுக்களை நிராகரித்தது.
இருவர் மீதும் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

